search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மசூத் உசேன்"

    ஜூன் மாதத்தில் கர்நாடகா கூடுதலாக 3 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளதால், அதுபோக ஜூலை மாதத்துக்கான மீதியை கர்நாடகா திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசேன் கூறியுள்ளார். #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் மசூத் அசார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தின் முடிவில் ஜூலை மாத பங்காக தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மசூத் உசைன் கூறியதாவது:-

    நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதில் மகிழ்ச்சி. ஆணையத்தின் பணிகள், தேவையான கட்டுமானம், நீர் இருப்பு, திறப்பு அளவு தகவல்கள் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக 3 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் ஜூலை 5ம் தேதி நடைபெறும்.

    அதுபோக, ஜூலை மாத பங்கீட்டை கர்நாடகா திறந்து விட வேண்டும்.  காவிரி ஆணைய உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் மதிக்க வேண்டும்.

    என அவர் கூறினார். தமிழக உறுப்பினர் சுப்பிரமணியன் கூறுகையில், “காவிரி ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கர்நாடக அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம் செயல்படுத்தவில்லை என்றால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பின்னர் பார்க்கப்படும். கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் எந்த கருத்தையும் கூட்டத்தில் முன் வைக்கவில்லை” என தெரிவித்தார்.
    ×